மேல் மாகாண வலயத்தினுள் நகர திண்மக் கழிவுகளை
முகாமைத்துவம் செய்வதற்கான நீண்ட கால தீர்வுகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
மேல் மாகாணத்தில் வியாபித்துள்ள கழிவு பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பணியானது, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• மீத்தொடமுல்ல குப்பை மேடு தொடர்பில் இராணுவத்தினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை 05 மாதங்களினுள் பூர்த்தி செய்வதற்கும், அப்பிரதேசத்தை நகர வனப்பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தல்
• தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கழிவகற்றும் வேலைத்திட்டங்களுக்கான அடிப்படை சூழலியல் மதிப்பீட்டு செயன்முறையினை பின்பற்றி சூழலியல் அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அதிகாரிமளித்தல்
• கழிவுகளை தரம் பிரித்து வெளியேற்றுவதற்கு பொதுமக்களை அறிவுறுத்தல் மற்றும் பிரித்தொதுக்கப்பட்ட கழிவுகளை உரிய இடங்களுக்கு அனுப்புதல்
• 50,000 குடும்பங்களுக்கு அதிகமான தொகையினர் வசிக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலம் அவர்களுடைய கழிவகற்றல் மற்றும் மீள்சுழற்சி மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
• மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை டிரான்ஸ்போம்பர்ஸ் லிமிடட் நிறுவனம் ஆகியவை இணைந்து கழிவுகளின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தல்
• புத்தளம், அருவக்காரு கழிவகற்றும் வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மூலம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ளல்
• களனி, குப்பை பறிமாற்றும் மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கு தேவையான பூமிப்பகுதியினை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு பொறுப்பாக்கிக் கொள்ளல்.
0 comments:
Post a Comment