அதிகாரப் பசியுடைய தொழிற்சங்கவாதிகள்

பிள்ளைகளின் கல்வியினை வீணடிப்பதற்கு மேற்கொள்ளும்

விரோத நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது.

- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

அதிகார மோகம் கொண்ட தொழிற்சங்க அமைப்புக்கள் மாணவ சமுதாயத்தின் கல்வியை சீர்குலைக்க மேற்கொள்ளும் முயற்சியை வன்மையான முறையில் கண்டிப்பதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய நூலகத்தின் 27வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் அவர் உரையாற்றினார்.
கடந்த காலத்தில் அதிக உஷ்ணம், டெங்கு ஆட்கொல்லியின் தாக்கம், வைரஸ் காய்ச்சலின் வியாபகம் முதலான பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இவற்றின் மத்தியிலும் பொருத்தமான மாற்றுத் திட்டங்களை வகுத்து பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
 இழந்த அதிகாரங்களை மீளவும் கைப்பற்றும் முயற்சியில் குழுவொன்று தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுவைத் தோற்கடித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல பெரும்பாலான மக்கள் முன்வந்துள்ளார்கள் என கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.
 நாட்டை நேசிக்கும் எந்தவொரு தொழிலாளியும் இத்தகைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த எதிர்கால சந்ததிக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. எனவேஇ மக்கள் அநீதிக்கு எதிராக கிளர்ந்தௌ வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகாரப் பசியுடைய அரசியல்வாதிகளின் குறுகிய அரசியல் இலாபத்திற்காக, தொழிற்சங்கங்கள் ஊடாக நோயாளிகளை பலியாக்குவது போல் பாடசாலை பிள்ளைகளின் எதிர்காலத்தினை சூனியமாக்குவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், நாட்டின் மீது அன்பு செலுத்தும் எந்தவொரு தொழிற்சங்கமும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top