இலங்கையில் இருந்து படகில் ராமேசுவரத்துக்கு
கடத்திச் செல்லப்பட்ட 4 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்
இலங்கையில்
இருந்து படகில் ராமேசுவரத்துக்கு கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கக்கட்டிகளை தமிழகத்தில் சுங்கத்துறையினர்
துப்பாக்கியால் சுட்டு பறிமுதல் செய்தனர்.
இலங்கையில்
இருந்து ராமேசுவரத்துக்கு
கடல் வழியாக
படகு மூலம்
தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு
தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை
பாம்பன் கடல்
பகுதியில் ரோந்து
சென்று கண்காணித்தனர்.
அப்போது
சுங்கத்துறையினரை கண்டதும் மீன்பிடி நாட்டுப்படகில் வந்த
2 பேர் படகில்
வேகமாக சென்றனர்.
உடனே சுங்கத்துறையினர்
அந்த படகை
விரட்டிச்சென்றனர்.
பிறகு
துப்பாக்கியால் கடத்தல் படகை நோக்கி சுட்டுபிடிக்க
முயற்சி செய்தனர்.
இதனால் கடத்தல்காரர்கள்
ஒரு பிளாஸ்டிக்
கேனை முயல்
தீவை ஒட்டியுள்ள
கடல் பகுதியில்
வீசிவிட்டு தப்பிச்சென்றனர். அந்த பிளாஸ்டிக் கேனை
சுங்கத்துறையினர் மீட்டு சோதனை செய்தபோது அதில்
40 தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
அதை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.
இது
குறித்து அதிகாரிகள்
கூறுகையில், 4 கிலோ எடை கொண்ட இந்த
தங்கக்கட்டிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1
கோடியே 20 லட்சம்
இருக்கும். தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி
வருகிறோம். தொடர்ந்து வரும் கடத்தல் தங்கத்தையும்
பிடிக்க திட்டமிட்டுள்ளோம்
என்றனர்.
0 comments:
Post a Comment