மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில்
கல்வியின் தரம் பின் தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் யார்?
பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி பகிரங்கமாகத் தெரிவிப்பு!
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் கல்வி மிக மோசமான நிலையில் பின்
தள்ளப்பட்டிருப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளே முக்கிய
காரணமாகும் என பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான
எம்.எஸ்.எஸ். அமிரலி அரச தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி இதுகுறித்து மேலும் தெரிவிக்கும்
போது கூறியதாவது,
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தை கஸ்டப்பட்டு நானே உருவாக்கினேன்.
கடந்த மூன்று முறை இந்த கல்வி வலயம் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை வெளிக்காட்டியது.
ஆனால், இன்று இக்கல்வி வலயம் பாரிய பின்னடைவை கண்டிருக்கிறது.
ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசியப்பாடசாலை) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வியியல் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன , கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம், கல்வி இராஜாங்க
அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இக்கல்வி வலயத்தில் கல்வியின் பின்னடைவை பகிரங்கமாகச்
சுட்டிக்காட்டி பேசினார்கள். அந்த இடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் இருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர்மெளலானா, இராஜாங்க அமைச்சர்
ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்களுடன் நானும் ஒன்றினைந்து இப்பிரதேசத்தின் கல்விக்காகப் பாடுபட்டுள்ளோம்.
ஒரு போதும் நாங்கள் கல்வியில் அரசியலைப் புகுத்தவில்லை. அதில் நாங்கள் தலையீடும் செய்யவில்லை
ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் கல்விக்குள் அரசியலைப் புகுத்திக்கொண்டிருக்கிறார்.
இங்குள்ள திறமையான கல்வி அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் கண்டபடி இடமாற்றம் செய்து
தனது அரசியலுக்கு வேண்டியவர்களையும் தனது உறவினர்களையும் அந்த இடங்களுக்கு கொண்டு வந்துள்ளார்.
எந்த அரசியல்வாதி பணம் ஒதுக்கி இருந்தாலும் பரவாயில்லை முடிந்த
கட்டடங்களைத் திறப்பதில் அவர் ஆர்வம் காட்டுவார். ஒரு முறை இப்பிரதேசத்தில் கட்டடம்
ஒன்று இரண்டு தடவைகள் திறந்து வைக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம் தனது கைக்குள் அடங்கியுள்ளது என்று நினைத்து
இவர் இவ்வாறு செயல்பட்டு இப்பிரதேசத்தின் கல்வியின் தரத்தை பின்னுக்கு நகர்த்திவிட்டார்.
இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ அலிசாஹிர் மெளலானா அவர்கள் சாட்சி பகர்வார் .இவ்வாறு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment