தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம்

ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு

87 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையிலும், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுப் படல்களின் மூலமாக கட்டிடத்திற்கு சூரிய மின்சக்தி பெற்றுக்கொள்ளப்படுதல் இங்குள்ள விசேட அம்சமாகும். இதன்மூலம் மாதாந்தம் சுமார் இரண்டரை இலட்ச ரூபாய் மின் கட்டணம் சேமிக்கப்படும்.
மின்னேரியா, மெதிரிகிரிய. ஹபரண, ஹிங்குராங்கொட ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும், திம்புலாகல, தமன்கடுவ, வெலிக்கந்த, லங்காபுர, ஹிங்குராங்கொ, மெதிரிகிரிய, ஹெலஹர போன்ற பிரதேச செயலகங்களுக்கும் அனர்த்த நிலைமைகளின்போது உபயோகிப்பதற்கான அனர்த்த உதவி உபகரணத் தொகுதிகளையும் ஜனாதிபதி வழங்கினார்.
அண்மையில் நடைபெற்ற உற்பத்திப்பெருக்க விருது விழாவில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட திம்புலாகல பிரதேச செயலகத்திற்கு அலுவலக உபகரணங்களையும் ஜனாதிபதி இதன்போது கையளித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் 47 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களும், 65 கொடை பத்திரங்களும் வழங்குவதை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதியினால் பத்து பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இதன்போது வழங்கப்பட்டன.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 வீடுகளுக்கான வீடமைப்பு உதவிகளை வழங்குவதனை அடையாளப்படுத்தும் வகையில் மூன்று பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வழங்கப்பட்ட ட்ரெக்டர், பவுசர் என்பன எலஹெர மற்றும் லங்காபுர பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதியினால் இதன்போது வழங்கப்பட்டன.
மேலும் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று லொறி பவுசர்கள் மெதிரிகிரிய, தமன்கடுவ, வெலிக்கந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டதுடன், அரசினால் வழங்கப்பட்ட இதேபோன்ற லொறி பொலன்னறுவை மாவட்ட செயலகத்திற்கும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை முன்னிட்டு தமன்கடுவ பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி; நாட்டினார்.
அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, வஜிர அபேவர்தன , இலங்கைக்கான சீன தூதுவர் லுயபெ iரிiபெ அம்மையாரும், தமன்கடுவ பிரதேச செயலாளர் நிஸ்ஸங்க ஆரச்சி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top