மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டு
உபகரணங்களுடன் சிறுவர் பூங்காக்களும்
சாய்ந்தமருதில் ஆடுகளுடன் சிறுவர் பூங்காவும்
அரசியல்வாதிகளே இது
உங்களின் பார்வைக்கு. . . .
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தில், காங்கயனோடை ஆற்றங்கரை பூங்கா, பாலமுனை நடுவோடை கடற்கரை பூங்கா, ஆரையம்பதி கடற்கரை பூங்கா, ஆகியவற்றை விளையாட்டு உபகரணங்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று 21 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக கையளித்தார்.
ஆனால், சாய்ந்தமருதில் 10,670,377 ரூபா செலவிடப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் அஷ்ரப் ஞாபகர்த்த சீறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இன்றி
கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிதி அமைச்சராக இருந்தபோது இப்பிரதேச மக்களின் பாவனைக்காக
கையளித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப்
அவர்களின் ஞாபகர்த்தமாக
அன்னாரின் பெயரிட்டு
உருவாக்கப்பட்டு அஷ்ரஃப் அவர்களின் பிறந்த நாளில் மக்களிடம் கையளிக்கப்பட்ட சாய்ந்தமருது
சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் இன்றி வெறிச்சோடிக்
கிடப்பதுடன் ஆடுகளின் மேய்ச்சல் இடமாக மாறியுள்ளது.
சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்கா போதுமான விளையாட்டு உபகரணங்களுடன் மக்களிடம் கையளிக்கப்படுவது எப்போது? இது இப்பிரதேச
மக்களின் நீண்ட நாள் கேள்வி!
சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்காவின் அவல நிலை...
0 comments:
Post a Comment