தேசிய மிலாதுன் நபி நிகழ்வு தொடர்பில்
நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
திறைசேரியினால் 14 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கீடு
இவ்வருடம் டிசம்பர் மாதம் 01ம் திகதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ள முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தின நிகழ்விற்காக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் பிரதான நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் சமய விவகாரங்களை அபிவிருத்தி செய்ய திறைசேரியினால் 14 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வை கொண்டாடுவதற்காக வேண்டி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள முஸ்லிம் சமய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அம்மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கும் தபால் தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment