ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கும் அமைப்புக்களே!
கிழக்கில் மாத்திரம் முஸ்லிம்கள் வாழவில்லை
என்பதை நினைவிற் கொள்ளுங்கள்
கல்முனை,
அக்கரைபற்று, நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை மற்றும், காத்தான்குடி
ஆகிய கிராமங்களில்
மாத்திரம் எமது முஸ்லிம் மக்கள் வாழவில்லை என்பதை
ஹர்த்தாலுக்காக அழைப்பு விடுத்திருக்கும் அமைப்புக்கள் நினைவிற்
கொள்ளட்டும்.
வடக்கு கிழக்குக்கு வெளியே பெரும்பான்மை இன மக்களிடயே மூன்றில் இரண்டு பங்கு
முஸ்லிம் சகோதரர்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் என்பதை ஹர்த்தாலுக்காக அழைப்பு விடுத்திருக்கும் அமைப்புக்கள் புரிந்து கொள்ளட்டும்
பாமர
இளைஞர்களை வீதிக்கு இழுப்பதனால்
ஏற்படும் விளைவுகளை
உரியவர்கள் அறியாமல் இல்லை.
மக்கள்
பிரதிநிதிகளே நீங்களுமா இந்த அழைப்பிற்கு பின்னால்
உள்ளீர்களா?
வெற்றுக்
கோசங்களைத் தவிர எம்மிடம் உள்ள உருப்படியான
நடவடிக்கை என்ன என்பதச் சற்று
சிந்தித்துப் பாருங்கள்?
ஏன்
அரசியல்வாதிகள் அனைவரும் அரச தலைவர்கள் முன்னால்
தமது வீரத்தையும் , கோசங்களையும்
வெளிப்படுத்தி அவர்களை முற்றுகையிட முடியாது?
கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களே! ஏனைய பிரதேச மக்களைப் பாதுகாப்பதாயின்
ஹர்த்தலைக் கைவிட்டு எமது முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்பட போராட்டம் நடத்துங்கள்.
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் மொத்தமாக 19 இலட்சத்து 67 ஆயிரத்து 227 (9.7%) பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மாவட்ட ரீதியாக வாழும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:-
மாவட்டம்
|
எண்ணிக்கை
|
வீதம்
|
கொழும்பு
|
271719
பேர்
|
11.8%
|
கம்பஹா
|
114851
பேர்
|
5.0%
|
களுத்துறை
|
114422
பேர்
|
9.4%
|
கண்டி
|
196347
பேர்
|
14.3%
|
மாத்தளை
|
44721
பேர்
|
9.3%
|
நுவரெலியா
|
21457
பேர்
|
3.0%
|
காலி
|
39255
பேர்
|
3.7%
|
மாத்தறை
|
25546
பேர்
|
3.2%
|
அம்பாந்தோட்டை
|
15163
பேர்
|
2.5%
|
யாழ்ப்பாணம்
|
2455 பேர்
|
0.4%
|
மன்னார்
|
16553
பேர்
|
16.7%
|
வவுனியா
|
12341
பேர்
|
7.2%
|
முல்லைத்தீவு
|
2013 பேர்
|
2.2%
|
கிளிநொச்சி
|
678 பேர்
|
0.6%
|
மட்டக்களப்பு
|
133939
பேர்
|
25.5%
|
அம்பாறை
|
282746
பேர்
|
43.6%
|
திருகோணமலை
|
159251
பேர்
|
42.1%
|
குருநாகல்
|
117697
பேர்
|
7.3%
|
புத்தளம்
|
152280
பேர்
|
20.0%
|
அநுராதபுரம்
|
71386
பேர்
|
8.3%
|
பொலன்னறுவை
|
30427
பேர்
|
7.5%
|
பதுளை
|
47172
பேர்
|
5.8%
|
மொனராகலை
|
9702 பேர்
|
2.2%
|
இரத்தினபுரி
|
24531
பேர்
|
2.3%
|
கேகாலை
|
60575
பேர்
|
7.2%
|
0 comments:
Post a Comment