இன்று கைமாறிய அமைச்சுக்களின்
முழுமையான விபரம்
தேசிய
அரசாங்கத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை
மறுசீரமைப்பில், சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு,
வேறு அமைச்சுக்கள்
வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், சிலரின்
அமைச்சுப் பதவிகள்
கைமாற்றப்பட்டுள்ளன.
அது
தொடர்பான முழுமையான
விபரம் இதோ,
வெளிவிவகார
அமைச்சராக பணியாற்றி
வந்த மங்கள
சமரவீரவிடமிருந்து அந்த பதவி
பறிக்கப்பட்டு, நிதி அமைச்சராக செயற்பட்ட ரவி
கருணாநாயக்கவிற்கு வெளிவிவகார அமைச்சுப்
பதவி வழங்கப்பட்டுள்ளது.
நிதி
அமைச்சராக இருந்த
ரவி கருணாநாயக்கவிடமிருந்து
அந்த பதவி
பறிக்கப்பட்டு, வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டு வந்த
மங்கள சமரவீரவிற்கு
நிதி அமைச்சு
வழங்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவிற்கு
மேலும் ஊடகத்துறை
அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறை
மற்றும் நாடாளுமன்ற
மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக
காணி அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற மறுசீரமைப்பு
விடயதானம் அவருக்கே
வழங்கப்பட்டுள்ளது.
சமூக
அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சராக இருந்த
எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு அந்த பதவியுடன், கண்டிய மரபுரிமை
அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்
மற்றும் தொழிற்சங்க
உறவுகள் அமைச்சராக
இருந்த டபிள்யு.டி.ஜே.செனவிரத்னவுக்கு அந்தப்
பதவியே மீண்டும்
வழங்கப்பட்டு, சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சுப் பதவி
மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
திறன்கள்
அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக
இருந்த மஹிந்த
சமரசிங்க துறைமுகம்
மற்றும் கப்பல்துறை
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,
துறைமுகம் மற்றும்
கப்பல் துறை
அமைச்சராக இருந்த
அர்ஜுன ரணதுங்க,
பெற்றோலிய வளத்துறை
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,
பெற்றோலிய வளத்துறை
அமைச்சராக இருந்த
சந்திம வீரக்கொடி,
திறன்கள் அபிவிருத்தி
மற்றும் தொழில்
பயிற்சி அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டம்
ஒழுங்கு அமைச்சராக
இருந்து தமது
அமைச்சுப் பதவியை
இராஜினாமா செய்த
திலக் மாரப்பனவுக்கு
அபிவிருத்திப் பணிகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர்
மஹிந்த அமரவீரவுக்கு,
மகாவலி அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சுப்
பதவி மேலதிகமாக
வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சுப் பதவிகள்
01. மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
02. எஸ்.பி. திஸாநாயக்க சமூக வலுவூட்டல், நலன்பேணல் மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சர்
03. டபிள்யு. டீ. ஜே. செனவிரத்ன தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர்
04. ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சர்
05. மஹிந்த சமரசிங்க துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர்
06. கயந்த கருணாதிலக காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்
07. அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
08. சந்திம வீரக்கொடி திறன் விருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சர்
09. திலக் மாரப்பன அபிவிருத்தி பணிகள் அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்
01.
மஹிந்த அமரவீர மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் (ஏற்கனவே உள்ள மீன்பிடித்துறை அமைச்சு உட்பட)
Cabinet Ministers
01.Hon. Mangala
Samaraweera – Minister of Finance and Mass Media
02. Hon. S.B.
Disanayake – Minister of Social Empowerment , Welfare and Kandyan Heritage
03 Hon. W.D.J.
Seneviratne – Minister of Labour , Trade Union Relations and Sabaragamuwa
Development
04.Hon. Ravi
Karunanayake–Minister of Foreign Affairs
05. Hon. Mahinda
Samarasinghe–Minister of Ports and Shipping
06.Hon.Gayantha
Karunathilake– Minister of Land and Parliamentary Reforms
07.Hon. Arjuna
Ranathunga – Minister of Petroleum Resources Development
08. Hon. Chandima
Weerakkody –Minister of Skills Development and Vocational Training
09 Hon.Thilak Marapana
– Minister of Development Assignments
State Minister
01.Hon. Mahinda
Amaraweera – State Minister of Mahaweli Development (including the existing
portfolio of Fishries)
0 comments:
Post a Comment