கம்பளையில் பிள்ளை கடத்தல் சம்பவம்,
சம்பந்தப்பட்டவர்கள் கைது
கம்பளையில் வைத்து
கடத்தப்பட்டு, மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள
வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்ட பெண் பிள்ளை
வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளை
சிறந்த தேகாரோக்கிய
நிலையில் காணப்படுவதாக
வைத்திய பரிசோதனைகள்
உறுதி செய்துள்ளன.
சம்பவம் தொடர்பில்,
மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் உள்ள குறித்த
இளைஞரின் தாயும்
சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட
பிள்ளை இரண்டு
வயதும் 8 மாதங்களையும்
உடையவர். வீட்டுக்கு
அருகிலுள்ள தந்தைக்கு சொந்தமான கடைக்கு உறவினர்
ஒருவருடன் சென்று
கொண்டிருக்கும் போது கடந்த 03 ஆம் திகதி
இவர் கடத்தப்பட்டிருந்தார்.
பிள்ளையுடன்
சென்ற உறவுக்
காரரின் வயது
26 ஆகும். கண்டியிலுள்ள
உறவினர் ஒருவரின்
வீட்டில் இருக்கும்
போது அவர்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பம் எடுப்பதற்காகவே
இந்தப் பிள்ளை
கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து
தெரியவந்துள்ளது.
குழந்தையை
விடுவதற்கு ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபா கோரப்பட்டுள்ளது.
பின்னர் இத்தொகை
10 லட்சம் வரையில்
குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பம்
தொகையை கையளிப்பதற்கு
இணக்கம் தெரிவித்தே
பொலிஸார் சந்தேக
நபர்களைக் கைது
செய்யும் நடவடிக்கையை
முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கம்பளையில் குழந்தையுடன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞரே இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment