மாகாண சபை நடவடிக்கைகளில்
முறையான செயற்பாடுகள் இருக்க வேண்டும்
- முதலமைச்சர்களின் மாநாட்டில் ஜனாதிபதி
நாட்டின்
தேசிய அபிவிருத்தி
இலக்கை பூர்த்தி
செய்ய வேண்டுமாயின்,
மாகாண சபை
நடவடிக்கைகளில் முறையான செயற்பாடுகள் இருக்க வேண்டுமென்று
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும்,
மாகாண சபைக்கும்
இடையில் புரிந்துணர்வு
மேம்படுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஹபரண சின்னமன் லொட்ஜ்
சுற்றுலா விடுதியில்
இடம்பெற்ற 33வது முதலமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றுகையில்
இந்த விடயங்களை
குறிப்பிட்டார்.
ஒன்பது
மாகாண சபைகளையும்
புதிய நடைமுறையில்
முன்னெடுப்பது நாட்டின் பொது அபிவிருத்தி இலக்கை
எட்டுவதில் பாரிய பிரச்சினையாகுமென்றும்
ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொதுவான இணக்கப்பாட்டின்
கீழ் இந்த
நிறுவனங்கள் செயற்பட வேண்டும். காத்திரமான பொதுமக்கள்
சேவையை மேற்கொள்வதில்
பக்கச்சார்பு இடம்பெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு
உள்ளாகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் என்ற
ரீதியில் இந்தப்
பொறுப்பை நிறைவேற்றுவதற்கு
அனைவரும் கட்டுப்பட்டிருப்பதாகவும்
ஜனாதிபதி இதன்
போது தெரிவித்தார்.
யாப்பு,
சட்டம், அதிகாரம்
எந்த வகையில்
இருந்த போதிலும்
அதன் நடைமுறை
அவற்றை முன்னெடுக்கும்
நபர்களின் நற்பண்புக்கு
அமைவாகவே இடம்பெறும்.
அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றம் என்பது தெளிவாவது வளங்களாகும். உதாரணத்திற்கு
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமை
பாரிய அனர்த்தமாகுமென்றும்
ஜனாதிபதி கூறினார்.
33வது
முதலமைச்சர்களின் மாநாட்டைக் குறிக்கும்வகையில்
வடமத்திய மாகாண
சபை முதலமைச்சர்
பேஷல ஜயரத்ன,
ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.
34வது மாநாடு நடைபெறவுள்ள
வடமேல் மாகாணத்திற்காக
அதன் முதலமைச்சர்
தலைவர் பதவி
வடமேல்மாகாண சபைக்கு இதன் போது வழங்கப்பட்டத.
தற்போது முதலமைச்சர்
மாநாட்டிற்கு தலைமைப் பொறுப்பை வகிக்கும் வடமத்திய
மாகாண முதலமைச்சர்
பேஷல ஜயரத்ன,
ஜனாதிபதி முன்னிலையில்
வடமேல் மாகாண
முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவுக்கு இந்த பதவிப்
பொறுப்பை வழங்கினார்.
0 comments:
Post a Comment