ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் தொடரில் இருதி ஆட்டத்திற்கு


சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் VS ஏறாவூர் யங் ஹீரோஸ் தெரிவு.

( ஜி.முஹம்மட் றின்ஸாத் )


கிழக்கு கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தில் பலம்பொருந்திய 32 உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகள் மோதிக்கொள்ளும் சர்வதேச தரத்திலான மாபெரும் சமரான, ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கடந்த 2017.03.05 திகதி தொடர்க்கம் சாய்தமருது பொது ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்த சுற்றுப்பாேட்டியானது பிமா விளையாட்டுக் கழகம் மற்றும் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றில் ஏற்பாட்டில் இடம்பெருகின்றமை குறிப்பிடத்தக்கது,
இந்த சுற்றுப்போட்டிக்கு பிரதான அனுசரணையாளராக, இந்தியாவின் முன்னணி விளையாட்டு உபகரண தயாரிப்பாளரான ஸ்பீட் ஸ்போட்ஸ் நிறுவனம் விளங்குகின்றது. அத்துடன், தொடரிற்கு இணை அனுசரணையாளராக ஸ்பீட் ஸ்போட்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்களை தீவு முழுவதிலும் விநியோகிப்பதில் முதன்மையாளராகத் திகழும் கஸானா ஸ்போட்ஸ் நிறுவனம் (KHAZANA SPORTS) இருக்கின்றது.
அந்த வகையில் குழுநிலை போட்டிகள் யாவும் தற்போது நிறைவுபெற்று இந்ததொடரில் 4 அணிகள் 2 பிரிவுகளாக அரை இருதி ஆட்டத்தில் மோதியிருந்தனர் .
அந்தவகையில்
1. நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகம் vs ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம்
2. சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் vs கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக் கழகம்
முதலாவது அரை இருதி ஆட்டத்தில் நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகம் vs ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் என்பன மோதின இதில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
இரண்டாவது அரை இருதி ஆட்டத்தில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் vs கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக் கழகம் என்பன மோதின இதில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
அந்தவகையில் மாபெரும் சமரான, ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் பட்டத்தினை எந்த அணிபெற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வியோடு அந்த மாபெரும் இருதி போட்டியில் மோத இருக்கின்றார்கள்
ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் vs சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர்.

மிக விரைவில் இந்தபோட்டி சாய்தமருது பொது ஐக்கிய மைதானத்தில் இடம்பெற உள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top