யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட

மியன்மார் அகதிகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகளை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மியன்மார் அகதிகள் நேற்று(30) யாழ் காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகள் காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இவர்களுடன் வந்த இரு இந்தியர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 மியன்மாரில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கிருந்து தாம் இடம்பெயர்ந்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்டங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,அனைத்து சொத்துக்களையும் இழந்து உயிர் தப்பினால் போதும் என்று மியன்மார் கோர அரசின் தாண்டவத்தில் இருந்து தப்பித்து யாழ்ப்பாணத்திற்க்கு கடல் வழியாக வந்துள்ள மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவ விரும்புகிறீர்களா..?
.மேற்படி முஸ்லிம்களுக்கு JMC - I அமைப்பினால் அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
உதவ முன்வருபவர்கள்...

இலங்கை வந்துள்ள மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்க்கான சந்தர்பாமாக ஆக்கி கொள்ளுங்கள்,
உதவி செய்ய விரும்பும் ஈமானிய உள்ளங்கள் கீழ் கானும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்,
Doctor Ramzy 773657030
Naushad +94 777 588 379
Ramees +94 77 558 3425
Mujahith Nizar 0779697226










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top