சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் நமது கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று இருப்பார்கள்..

டெலிவிஷன் பெட்டியை உடைப்பதற்கு பதிலாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்ப்பதை நாட்டு மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் காஷ்மீரில் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top