புதுச்சேரி
முதல்வரின் காரில் இந்திய தேசியக் கொடியைத் தலைகீழாகப்
பொறுத்திய, ஓட்டுநர் இப்றாஹிம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி
முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அவரது காரைத்
தொடர்ந்து பாதுகாப்புப்
படையினர், அரசு
அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின்
கார்களும் பின்னால் சென்றுள்ளன. அப்போது அவரது
காரில் பொறுத்தப்பட்டிருந்த
இந்திய தேசியக் கொடி தலைகிழாக
இருந்தது.
இதையடுத்து
மீண்டும் கொடி
அகற்றப்பட்டு, சரியாகப் பொருத்தப்பட்டது. இந்தச் சம்பவம்
சென்னை விமானநிலையத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் காட்சிகள்
சமூக வலைதளத்தில்
வைரலாகப் பரவியது.
இந்நிலையில், முதலமைச்சர் நாரயணசாமியின் கார் ஓட்டுநர்
இப்றாஹிம்
தற்போது பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment