தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”தேசிய காங்கிரஸின் தெளிவான பாதை” மாபெரும் பொதுக்கூட்டம் நாளை 19 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல். 5.30மணிக்கு அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றவுள்ளார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment