சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான உள்ளுராட்சி சபையை உடன் பிரகடனப்படுத்த அல்லாஹ்வின் உதவியைக்கோரி சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள அனைத்து ஜும் ஆ பள்ளிவாசல்களிலும் இன்று 2017-08-18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து விஷேட (துஆ) பிராத்தனைகள் இடம்பெற்றன.
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி பிராத்தனையின்போது குறித்த உள்ளுராட்சிசபை விடயத்தில் பங்கெடுத்த அனைத்துக் கட்சிகள் சமூக நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் போன்றோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இந்த மக்களின் எதிர்பார்ப்பை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு அல்லாஹ் நல்ல எண்ணத்தையும் விட்டுக்கொடுக்கும் பக்குவத்தையும் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கப்பட்டது.
சாய்ந்தாமருது ஜும்ஆ பெரியபள்ளிவாசலில் பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி) விஷேட (துஆ) பிராத்தனை செய்தார்.
0 comments:
Post a Comment