நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து இன்றுடன் (18) இரண்டு வருடங்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கூட்டு எதிர்க் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பு வைத்தியசாலை லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவு செய்யவில்லையெனவும், அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன, டளஸ் அழகப் பெரும, குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பிரணாந்து மற்றும் பவித்ரா வன்னியாராச்சி போன்றோர் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment