சிங்கப்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட 2 கிலோகிராம் தங்கத்துடன் இலங்கையின் அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட இந்த நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே விடுவிப்பதற்கு முயற்சித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி கட்டுநாயக்க விமான நிலையப்பணிகளில் ஈடுபடுபவர் என்று சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 9.1 மில்லியன் ரூபா பெறுமதியானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment