மட்டக்களப்பில் தாயும், மகனும் படுகொலை:

யாழில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்

மட்டக்களப்பு, ஏறாவூர் - சவுக்கடி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம் வயது தாய் மற்றும் அவரது மகன் ஆகியோரின் படுகொலை சம்பவத்தின் போது கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கொள்ளையிடப்பட்ட நகைகளை மீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
தீவிரமான தொடர்ச்சியான புலன் விசாரணைகளையடுத்து நாட்டை விட்டுத் தப்பியோடும் பிரயத்தனத்தில் தலைமறைவாகியிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பயனாக அவரது சகாவையும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடமையான 16 பவுண் தங்க நகைகளையும் நாம் மீட்டுள்ளோம்.
இந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள தங்க நகைகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் இன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டன.
பெண்ணையும் அவரது மகனையும் கொலை செய்து விட்டு நகைகளை அபகரித்த கொலைகாரர்கள் அவற்றை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்று அடகு வைத்திருந்த நிலையில் எம்மால் மீட்கப்பட்டுள்ளன குறிப்பிட்டுள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top