சாய்ந்தமருதில் உள்ள வரவேற்பு கோபுரத்தில்

மாநகர சபை, நகரசபையாகவும்

கல்முனை, சாய்ந்தமருது எனவும் மாற்றம்

கல்முனை மாநகர சபையின் தென்புற சாய்ந்தமருது எல்லையிலுள்ள வரவேற்பு கோபுரத்திலிருந்த “மாநகர சபை உங்களை அன்புடன் வரவேற்கின்றது – கல்முனை என்ற வரவேற்பு வசனத்திற்குப்பதிலாக தற்போது “ நகரசபை உங்களை அன்புடன் வரவேற்கின்றது – சாய்ந்தமருதுஎன்ற வசனம் மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
                                                                                                                                                                                           
சாய்ந்தமருது வடபுற எல்லையிலிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சாய்ந்தமருது என பெயர் பொறிக்கப்பட்ட  பெயர்ப்பலகை நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டிருந்தது.


இந்த சம்பவத்தை தொடர்ந்தே சாய்ந்தமருது தென்புற எல்லையிலிருந்த  வரவேற்பு கோபுரத்தில் எழுதப்பட்டிருந்த  வரவேற்பு வாசகங்கள் மாநகர சபை,  கல்முனை என்ற சொற்கள் அழிக்கப்பட்டு “நகரசபை உங்களை அன்புடன் வரவேற்கின்றது – சாய்ந்தமருது“ என மாற்றப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top