விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த

மாவா போதைப்பொருள் சுற்றிவளைப்பில் மீட்பு

மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த நிலையில் பெருந்தொகையான மாவா எனப்படும் போதைப்பொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி  வளைக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை அதிரடிபடையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து  மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின் போது மாவா போதைப்பொருள் உட்பட இனிப்பு பானங்கள்  புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்  வழக்குப்பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top