இலங்கையில் 14 ஆயிரம் காசநோயாளர்கள்

4000 பேர் சிகிச்சை பெறாமல் இருப்பதாக தகவல்




நாட்டில் சுமார் 4000 காச நோயாளர்கள் சிகிச்சை பெறாமல் இருப்பதாக இலங்கை சுவாச நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள காசநோயாளர்களின் எண்ணிக்கை 14ஆயிரம் ஆகும். இவர்களுள் 10 ஆயிரம் பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது கொழும்பில் நேற்று நடைபெற்ற   மாநாட்டில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டன.
இந்த நோய் தொடர்பில் சமூக மக்கள் மத்தியில்; தவறான கருத்து நிலவுகின்றது. இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவதன் மூலம் இதனை குணப்படுத்தமுடியும். காசநோயாளர் தடுப்புதினம் இம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top