பிரதமரின் ஒலுவில் விஜயம்:

செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு
முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும்
கூட்டத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை

ஒலுவில் துறைமுக விடுதி மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினரின் பங்கேற்றிருந்த கூட்டத்துக்குச் சென்றுசெய்தி சேகரிக்கரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன்அழைக்கப்பட்டிருந்த மீனவர் சங்க நிருவாக உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
அவர்கள் மட்டுமன்றிகிழக்கு மாகாண சபையின்முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கூட்டத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
பிரதமர் கலந்து கொண்ட மேற்படி கூட்டம்,நேற்று 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து 11 மணிவரைநடைபெற்றது





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top