நாடாளுமன்ற உறுப்பினர்
நடு வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம்

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே வீதி கடவையில்  படுத்து இன்று (10) ஆர்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
 நாவலபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஸவை  இடமாற்றம் செய்யக்கோரி இன்று (10) காலை 5.00 மணி முதல் இவ்வார்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
 கண்டி - ஹட்டன் பிரதான வீதியின் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள மஞ்சள் கடவையில்  படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையில் இடம்பெற்று வருவதாக நவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 ஆர்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை  மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைத்தந்துள்ள போதிலும்  நீதியை சரியாக கடைபிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்துள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top