ஆற்றில் விழுந்த பீ.எம்.டப்ளியூ காருடன்
பொய்யான செய்திகள்
- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தலங்கம பொலிஸ் பிரிவில் தலவத்துகொடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஆற்றில் பீ.எம்.டப்ளியூ. கார் விழுந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தமாக பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.
ஆற்றில் விழுந்த காரை கைவிட்டு அதன் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன் காரை தலங்கம பொலிஸார் கைப்பற்றி தம்வசம் வைத்துள்ளனர்.
காரின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் இலக்கம் 85 சிகேரா வீதி, மாதிவல என்ற முகவரியை சேர்ந்த பாஹிம் மொஹமட் ஹூசைன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உரிமையாளரே சம்பவம் நடைபெற்ற போது காரை ஓட்டியமை பாதுகாப்பு கமெரா பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்கையில், சிலர் தமது அரசியல் பகையை தீர்த்துக்கொள்ள ஆற்றில் விழுந்த காருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்புப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment