குறிஞ்சாமுனையில் கணவன் மனைவி சடலங்கள் மீட்பு
மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு
கணவனும் தற்கொலை செய்துள்ளதாக சந்தேகம்
மட்டக்களப்பு வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட குறிஞ்சாமுனையில் கணவன் மனைவி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தசாமி வேதநாயகம் (35) நீலகண்டன் யோகநாயகி (25) ஆகிய இருவரின் சடலங்களுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இன்று 19 ஆம் திகதி திங்கள்கிழமை காலை இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களின் வீட்டிலிருந்து இவ்விரு சடலங்களையும் மீட்டுள்ளனர்.
மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.
மனைவி படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், கணவன் தூக்கிட்ட நிலையிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கணவனின் முதல் திருமணத்தில் 05 வயது மகனும், தற்போதைய திருமணத்தில் 05 மாத குழந்தையும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment