புத்தளம் பாலாவியில் இரும்பு கடையில் வெடிப்பு
இளம் குடும்பஸ்தர் பலி

புத்தளம் பாலாவி மல்லிகாபுரம் பகுதியில் உள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பாலாவி பரிதாபாத் கிராமத்தைச் சேர்ந்த அஸீஸ் முஹம்மது ஆதில் (27) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், பாலாவி மல்லிகாபுரம் பகுதியில் பழைய இரும்புகளை கொள்வனவு செய்யும் கடையொன்றில் தற்காலிகமாக தொழில்புரிந்து வந்துள்ளார்.
இன்று (04) காலை குறித்த கடையினுள்ளே உரிமையாளரின் மகனும், உயிரிழந்த நபருமே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடை உரிமையாளரின் மகன் காலை உணவு உட்கொண்டிருந்த போது, உயிரிழந்த நபர் பழைய இரும்புகளை உடைத்துக்கொண்டிருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்தான், பாரிய சத்தத்துடன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ௯றப்படுகிறது.
இச்வெடிப்புச் சம்பவத்தினால் கடைப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும், வெடிப்பு சத்தத்தைக் கேட்டதும் கடையை விட்டு வெளியே ஓடியதாகவும் கடை உரிமையாளரின் மகன் ௯றியுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் கடைக்குள்ளே வந்து பார்த்த போது கடையில் தொழில்புரிந்த குறித்த நபர் உயிரிழந்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் பற்றி புத்தளம் பொலிஸருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எப்.எம். பாரிஸ் மரிக்கார், சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top