ஜப்பான் சென்ற ஜனாதிபதியின் குழுவில்
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்
ஞானசார தேரர் இல்லையாம்
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவிப்பு
பொதுபல
சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட
அத்தே ஞானசார
தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
குழுவில் ஜப்பானுக்கு
செல்லவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப்
பிரிவு அறிவித்துள்ளது.
தனிப்பட்ட
பயணமாகவே ஞானசார
தேரர் ஜப்பான்
சென்றிருந்தார் என்றும், டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஒழுங்கு
செய்யப்பட்ட ஜனாதிபதியைச் இலங்கையர்கள் சந்திக்கும் நிகழ்வில்
அவர் பங்கேற்றார்
என்றும் அந்தச்
செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் சென்ற ஜனாதிபதியின் குழுவில்
ஞானசார தேரர்
இடம்பெற்றிருந்தார் என்று இணையத்தளங்களில்
வெளியான செய்திகள்
முற்றிலும் பொய் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது.


0 comments:
Post a Comment