கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை
(படங்கள்)
கண்டி மாவட்டத்தில் அக்குறணை, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது.
சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அக்குற்ணை, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது.
வன்முறைக் கும்பலைக் கலைக்க, இராணுவத்தினர் பொல்லுகளுடன் துரத்திச் செல்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களை அமைதியாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம், முஸ்லிம் தலைவர்கள் கோரி வருகின்றனர்.
இதற்கிடையே கண்டி மாவட்டத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு விரைந்து சென்றுள்ளார். அவர் அமைதியை ஏற்படுத்துவது குறித்து மதத்தலைவர்கள், ஆயுதப்படையினருடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
பொலிஸார் அனைவரினதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top