தாக்குதல்தாரிகளின் நோக்கம் என்ன?
வன்முறைச் சம்பவங்களிலும் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றார்கள்.
எனினும், உயிரிழப்புக்களைத் தவிர்க்க ஆகக் குறைந்தளவு பலத்தையே பயன்படுத்துகின்றோம்” என ராணுவ ஊடகப் பேச்சாளர் அட்மிரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சகல விடயங்களும் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மேலும், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் பொறுப்புடன் செயற்பட்டனர் எனக் குறிப்பிட்ட ராணுவப் பேச்சாளர், அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் துரோகிகள் என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


0 comments:
Post a Comment