புதிய உள்ளுராட்சிமன்றங்களை
அமைப்பதற்கான பணிகள் நாளை ஆரம்பம்
உள்ளூட்சிமன்ற
நிறுவனங்களை அமைக்கும் பணி நாளை முதல்
ஆரம்பமாகும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி
அமைச்சு தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக அமைச்சின்
செயலாளர் கமல்பத்மஸ்ரீ
கருத்து தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி
மன்ற நிறுவனங்களை
அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் உள்ளுராட்சி மன்ற
ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை
ஏதேனும் ஒரு
கட்சிக்கு பெரும்பாண்மையை
பெற்றுக்கொள்ள முடியாத உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாத்தை
நிலைநிறுத்தும் முறை குறித்தும் அமைச்சின் செயலாளர்
தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்ளுராட்சி
மன்றங்களுக்கான தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம்
10 ஆம் திகதி
நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தெரிவுசெய்யப்பட்ட
உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில்
முழுமையாக வெளியிடுவதற்கான
பணிகள் இடம்பெற்று
வருகின்றன. இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தல்
மூலம் மன்றங்களை
பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களும் தெரிவாகியுள்ளனர்.
0 comments:
Post a Comment