தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் இப்ராஹிம்
அமைச்சரிடம் இருந்து விருது பெற்றவர்

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இன்ஷாப் இப்ராஹிம், தனது தந்தை யூசுப் மொஹமட் இப்ராஹிமுடன் கடந்த 2016ஆம் ஆண்டு அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் ஏற்றுமதிக்கான விருதை பெற வந்திருந்த புகைப்படம் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

38 வயதான இன்ஷாப் இப்ராஹிம், அவரது சகோதரரான இல்ஹாம் இப்ராஹிமுடன் ஷங்கரி லா மற்றும் சினமன் கிரேன்ட் ஹோட்டல்களுக்கு சென்று தற்கொலை குண்டுகளை வெடிக்க செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இன்ஷாப் இப்ராஹிம் தனது மனைவி, 4 பிள்ளைகளுடன் கொழும்பு நகரில் 1.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான வீட்டில் வசித்து வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




Inshaf (pictured far right at a business awards), 38, lived with his wife and their four children - an eight-year-old daughter and three boys aged six, four and two - in a £1.5million six-bed mansion on one of the most exclusive streets in Colombo



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top