தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்
மொஹமட் இப்ராஹிம் கட்சியின் உறுப்பினர் அல்ல: ஜே.வி.பி


தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் என்பவரின் பெயர் கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அவர் கட்சியின் செயற்பாட்டாளரோ, கட்சியின் அங்கத்தவரோ இல்லை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த நபரின் பெயர் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

தேசிய பட்டியலில் பெயர் குறிப்பிடப்படும் நபர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். பல்வேறு தொழில்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கப்படும்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் நடந்த தாக்குதல் சம்பவங்களை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணிக்கு சேறுபூசும் நோக்கில் குறுகிய நோக்கம் கொண்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது எனவும் ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top