ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக
நியமிக்கப்பட்டமை தொடர்பில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,
அமெரிக்காவும்  எதிர்ப்பு.

இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தமிழர்களை அவமதிப்பதாகும்.இது எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. இது குறித்து நாங்கள் அதிருப்தியை தெரிவிக்கிறோம்..”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.. சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை,
புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top