தைவான் விமானம் பாலத்தில்
மோதி ஆற்றுக்குள் பாய்ந்தது!
19 உடல்கள்
மீட்பு
தைவான்
நாட்டின் தலைநகர்
தைபேவில் உள்ள
சங்சான் விமான
நிலையத்தில் இருந்து காலை டிரான்ஸ்ஏசியா ஏடிஆர்
72-600 ரக விமானம்
புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது
நேரத்தில் தைபே
நகருக்கு வெளியே
பாலம்
ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது.
விமானத்தின் இடது புற இறக்கை சாலையில்
சென்ற கார்
டாக்சியின் மீது மோதியுள்ளது மீட்பு குழுவினர்
சம்பவ இடத்திற்கு
சென்று மீட்பு
பணியில் ஈடுபட்டனர்.
விமானத்தில் பயணம் செய்த 16 பேர் பத்திரமாக
மீட்கப்பட்டனர். 19 பேரின் உடல்கள்
மீட்கபட்டன விமானத்தில் விமானிகள் இரண்டு பேர்
உள்பட 58 பேர்
இருந்தனர்.
விமானம்
மோதிய டாக்சியில்
இருந்த டிரைவரும்
மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தைவானில்
காலையில் நடைபெற்ற
இந்தவிபத்து தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள்
சிக்கியபோது வானிலை மிகவும் சீராகவே இருந்தது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து
தொடர்பாக விசாரணையும்
தொடங்கியுள்ளது.
விபத்து
நடந்த இடத்தில்
வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒருவர் தனது செல்போன்
மூலம்
எடுத்த வீடியோவை சோஷியல் மிடியாக்களில் வெலியிட்டு
உள்ளார். அது
பார்ப்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது.
கடந்த
ஆண்டு ஜூலை
மாதம் டிரான்ஸ்ஏசியா
விமானம் மோசமான
வானிலை காரணமாக
விபத்தில் சிக்கியது
இதில் 48 பேர்
பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=H5Z-7uoYAgU
0 comments:
Post a Comment