ஜோர்டான் விமானி
படுகொலைக்கு பதிலடி
பெண் போராளி உட்பட 2 பேரை
ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது
இஸ்லாமிய
தேச (ஐ.எஸ்.)போராளிகள்
பிடியிலிருந்த
ஜோர்டான் நாட்டுப்
போர் விமானி
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஜோர்டான் அரசு.பெண் போராளி உட்பட
2 பேரைத் தூக்கிலிட்டுப் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது
ஈராக்,
சிரியாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருக்கும் ஐ.எஸ். போராளிகளுக்கு எதிராக
அமெரிக்கா தலைமையிலான
கூட்டுப் படையில்
ஜோர்டான் நாட்டு
விமானப் படையும்
இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், சிரியாவில் கடந்த டிசம்பர் மாதம்
24-ஆம் திகதி
ஐ.எஸ்.
நிலைகள் மீது
தாக்குதல் நடத்தச்
சென்ற ஜோர்டான்
விமானம் வடக்கு
சிரியா பகுதியில்
இயந்திரக் கோளாறு
காரணமாக நொறுங்கி
விழுந்தது. இதைத் தொடர்ந்து அதிலிருந்த விமானி
மாஸ் அல்-கஸஸ்பே போராளிகளால்
சிறைப்பிடிக்கப்பட்டார்.
இந்த
விமானத்தை சுட்டு
வீழ்த்தியதாக ஐ.எஸ். கூறியது. அந்த
விமானியை விடுவிக்க
வேண்டுமானால், ஜோர்டான் சிறையிலுள்ள பெண் போராளியை
விடுவிக்க வேண்டுமென
ஐ.எஸ்.
போராளிகள் நிபந்தனை
விதித்தனர். கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காத
நிலையில், பெட்ரோல்
ஊற்றி தீ
வைத்து எரித்து
விமானியை கொலை
செய்தனர். இது
தொடர்பான வீடியோவையும்
வெளியிட்டனர்.
இதற்கு
பதிலடி கொடுக்கும்
விதமாக ஜோர்டான்
அரசு தங்களது
பிடியில் மரண
தண்டனை விதிக்கப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு
இருந்த ஈராக்கிய
பெண் போராளி
சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர்
ஜியாத் கார்போலி
ஆகிய இரு
போராளிகளையும் தூக்கிலிட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யார் இந்த போராளிகள்?
பெண்
போராளி சஜிதாஅல் ரிஷாவிக்கு அம்மானில் 2005-ம் ஆண்டு
60 பேர் கொல்லப்பட்ட
குண்டு வெடிப்பில்
மரண தண்டனை
விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று
மற்றொருபோராளியான ஜைத் அல் கர்போலிக்கு, 2008-ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள
ஜோர்டான் மக்களை
கொல்ல சதி
செய்த வழக்கில்
மரண தண்டனை
விதிக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment