முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பதிவு
செய்யப்பட்ட
27 வது ஆண்டு
நிறைவு நிகழ்வு
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் ஓரு
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக
பதிவு செய்யப்பட்டு
27 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு இன்று 11 ஆம் திகதி
புதன்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள
கட்சியின் தலைமையமான
'தாருஸ்ஸலாம்' கட்டடத்தில் மாபெரும்
நிகழ்வொன்று இடம்பெற்றது.
கட்சியின்
தலைவரும் நகர
அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற
இந் நிகழ்வில்
'தாராளத்துவ கோட்பாட்டின்
விழுமியங்களும்,
முஸ்லிம்களும்'
என்ற தொனிப்பொருளில்
உயர் கல்வி
இராஜாங்க அமைச்சர்
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில்
கட்சியின் செயலாளர்
இராஜங்க அமைச்சர்
எம்.ரீ.ஹஸன் அலி,
பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.எம்.
அஸ்லம் மற்றும்
கிழக்கு மாகாண
சபை முதலமைச்சர்
ஹாபீஸ் நஸீர்
அஹமட் மாகாண
சபை உறுப்பினர்கள்,
பிரதேச சபை
உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள்
எனப் பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment