டில்லி பேரவை தேர்தலில்
67 தொகுதிகளை வென்று
ஆம் ஆத்மி அமோக வெற்றி!
* 70 இடங்களில்
மூன்றே
இடங்களை
பிடித்து
பாஜ
படுதோல்வி
* 15 ஆண்டு
ஆட்சியில்
இருந்த
காங்கிரசுக்கு
ஒரு இடமும்
இல்லை
* மோடி, அமித் ஷா அலைக்கு முற்றுப்புள்ளி
டில்லி
சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி,
மொத்தம் உள்ள
70 தொகுதிகளில் 67 தொகுதிளைக் கைப்பற்றி
அமோக வெற்றி
பெற்றுள்ளது. பா.ஜனதாவால் 3 தொகுதிகளை
மட்டுமே தக்கவைத்து
கொள்ள முடிந்தது.
இதனால் அக்கட்சி
எதிர்க்கட்சி அந்தஸ்து பெறும் வாய்ப்பை கூட
இழந்தது. 15 ஆண்டுகளாக
ஆட்சியில் இருந்த
காங்கிரஸ் கட்சியால்
ஒரு தொகுதியிலும்
வெற்றி பெறவில்லை.
டில்லியின் மாபெரும் வெற்றி மூலம், பிரதமர்
மோடி, பாஜ தலைவர்
அமித்ஷாவின் அலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஆம்
ஆத்மி. கட்சி
எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஆம் ஆத்மியின் சட்டப்பேரவைக்
குழு தலைவராக கேஜ்ரிவால்
ஒருமனதாக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து எதிர்வரும்
14ம் திகதி
அவர் முதல்வராக
பதவியேற்கிறார்.
0 comments:
Post a Comment