பொலிஸ் அதிகாரியான 7 வயது சிறுமி
மும்பையில் எலும்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
சிறுமியின்
ஆசை நிறைவேற்றம்
மும்பையைச்
சேர்ந்த ஏழு
வயது சிறுமி
மெஹக் சிங்.
கடைசி நிலை
எலும்பு புற்றுநோயால்
பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு உயிர் பிழைத்திருக்க
10 முதல் 15 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக
டாக்டர்கள் தெரிவித்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'போன்' கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள்
70 சதவீதம் பேர் மரணப்பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். ஆனால், இந்த
சிறுமி நான்காம்
நிலையாக கடைசி
கட்ட எலும்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் உயிர் பிழைத்திருக்க
இனி வாய்ப்பு
மிகக்குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,
மேக்-எ-விஷ் என்ற
தன்னார்வ தொண்டு
நிறுவனம் பொலிஸ்
அதிகாரி ஆக
விரும்பிய அந்த
சிறுமியின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தது. இதை
மும்பை பொலிஸாரிடம்
தெரிவித்தபோது அவர்களும் அதற்கு சம்மதித்தனராம்.
இதையடுத்து,
அந்த சிறுமி
பொலிஸ் இன்ஸ்பெக்டர்
உடையில் முதல்வன்
பாணியில் ஒரு
நாள் பொலிஸ்
அதிகாரியாக நாற்காலியில் அமர்ந்தார். காவலர்களுடன் சல்யூட்
அடித்தும், உரையாடியும் தனது ஆசையை நிறைவேற்றிக்
கொண்டார்.
அந்த
சிறுமி புன்னகையோடு,
'பொலிஸ் அதிகாரியாக
வந்து நாட்டைக்
காப்பாற்றுவதே எனது ஆசை. பொலிஸ் யூனிபார்மை
அணிய வேண்டும்
என நீண்ட
நாட்களாக நான்
ஆசைப்பட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.. அவளுடைய
ஆர்வத்தை கண்டு
மும்பை 'போய்வாடா'
காவல் நிலைய
அதிகாரிகள் நெகிழ்ந்து போனார்களாம்.
சிறுமியின்
ஆசையை பூர்த்தி
செய்தது பற்றி
அவளுக்கு சிகிச்சை
அளித்து வரும்
டாடா மெமோரியல்
மருத்துவமனையின் டாக்டர்.ஸ்ரீதர் கூறுகையில், 'சில
குழந்தைகள் அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும் போது
மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அந்த அதீத மகிழ்ச்சியே
நோயை எதிர்த்து
போராடும் வல்லமையை
ஒரு கட்டத்தில்
உடலுக்கு தரும்.
பெரும்பாலான குழந்தைகள் சினிமா நடிகராக வரவேண்டும்
என்றே விரும்புவார்கள்.
ஆனால், மெஹக்
இந்த சிறுவயதிலேயே
பொலிஸ் அதிகாரியாக
விரும்பியிருக்கிறாள். இது மிக
அபூர்வம்.' எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment