இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை
தோற்றுவிக்கும் அரசியல்வாதிகளுக்கு பதிலடியாக

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடத்

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தீர்மானம்


சமூக நல்லிணக்கமுமின்றி இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சில அரசியல்வாதிகளுக்கு பதிலடியாக எதிர்வரும் பொது தேர்தலில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் அல்-ஹாஜ் ஹுதா உமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்,தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்ற வாய்ச்சபாடலுடன் எந்தவித சமூக நல்லிணக்கமுமின்றி இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சில அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடத்தையும் தக்க விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இலங்கை தாய் நாட்டில் சகலரும் ஒரு தாய் பிள்ளைகள் போல ஒற்றுமையாக வாழ வழிசமைக்கவும்,வெறுமேன வாய் வார்த்தைகளாய் அன்றி செயல் ரீதியாகவும் நமது நாட்டில் மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்து புதியதானதும்,நவீனமயமானதுமான அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்க தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி நேரடி அரசியலுக்கு வர ஆயத்தமாவதாகவும், இது சம்பந்தமான விரிவான ஒரு கலந்துரையாடலுக்காக மிக விரைவில் எமது கட்சி, ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்களை சந்திக்க உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top