செல்லாக்காசாகியது கிழக்கு முதலமைச்சர் பதவி
-முகம்மது பாயிஸ்-

கடந்த சில நாட்களாக பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டு வந்த கிழக்கு முதலமைச்சர் பதவி தற்போது ஒரு முதலைக்கு வழங்கப்பட்டதோடு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த தேர்தலிலும் சரி அதற்கு முன்னைய தேர்தல்களிலும் சரி கட்சிக்காக எந்தவிதமான ஆரோக்கியமான பங்களிப்புகளையும் செய்திராத பல்வேறு தருணங்களிலும் கட்சியை காட்டிக் கொடுத்து வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் எண்ணையும் தண்ணீரும் பெற்றோலும் டீசலுமாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு அவ்வாறு மேற்கொண்ட சுய அபிவிருத்திக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுத்து இருக்கின்ற அரசுகளோடு இணைந்திருந்து கூஜா தூக்கிவந்ததாக போராளிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆட்பட்டிருக்கின்ற ஒருவருக்கு இந்தப்பதவியை வழங்கியிருப்பதானது கட்சியின் போராளிகளை நெருப்புக்கிடங்கினில் தள்ளிவிடுவதற்கு சமனானதாகும்
இவ்வாறான கொள்கையில்லாத ஒருவருக்கு இந்தப்பதவியை வழங்குவதற்காக முழு முஸ்லிம் சமூகத்தின் அபிலாசையும் சின்னாபின்னப்படுத்தப்படுமளவுக்கு தலைமை முடிவெடுத்துள்ளமையானது முஸ்லிம் காங்கிரசின் ராஜபக்ஷயிசமாகவே போராளிகளால் பார்க்கப்படுகிறது
இதைவிடவும் இந்த முதலமைச்சர் பதவியை முன்னாள் முதலமைச்சரிடமோ அல்லது தமிழ் கூட்டமைப்பிடமோ வழங்கியிருக்கலாம் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
காலா காலமாக உச்சக்கட்ட பங்களிப்பை வழங்கிவருகின்றதும் ஒரு பெருந்தலைமையிருந்து அழகு பார்த்ததுமான இந்தக் கட்சி இன்று இன்றைதலைமையினால் எட்டி உதைக்கப்பட்டுள்ளமை இந்த அம்பாறை மாவட்ட மக்கள் சுயகௌரவமற்றவர்கள் என்பதாகவும் அவர்கள் எத்தகைய அவமானப்படுத்தல்களையும் தாங்கிக் கொண்டு வளர்த்த பூனைபோல முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்ற தலைமையின் குறைத்து மதிப்பிடலின் வெளிப்பாடாக அன்றி வேறொன்றாக பார்க்க முடியவில்லை
இராஜபக்கஷ யுகத்திற்கெதிராக போராடி வெற்றிகொண்ட மக்களும் போராளிகளும் கட்சிக்குள்ளான ராஜபக்ஷ யுகத்தின் எதிர்கால நகர்விலிருந்து உண்மையான கட்சித்தொண்டர்களுடைய எதிர்கால அரசியல் நிலைப்பாடு மாபெரும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது
பெருந்தலைவரின் கட்சிக் கீதங்களுக்கு கட்டுப்பட்டு கட்டுண்டுகிடக்கின்ற பக்குவம் காலமெல்லாம் அம்பாறை மாவட்டப் போராளிகளிடமன்றி வேறெங்கும் வராது என்ற தலைவரின் அதீத நம்பிக்கையே தலைவரின் இத்தகைய ஒருவருக்கு முதலமைச்சர் வழங்குவதாக எடுத்திருக்கும் முடிவுக்கான ஆதாராமாக இருக்கவேண்டும்
கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படாமல் கடந்த ஜனாதிபதிித் தேர்தலில் மகிந்தவின் வெற்றிக்கு பங்களிப்புச்செய்ததன் மூலம் முஸ்லிம் அபிலாசைக்கு சாவுமணியடித்து பொதுபல சேனாவுக்கு சமுகத்தை நரபலி கொடுக்க முயற்சித்த இவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கலாமென்றால் ஏன் பசீருக்கு அமைச்சுப்பதவி வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது நியாயம்தானே?
ஏனெனில் கட்சிக்காக பசீர் பல்வேறு தியாகங்களையும் செய்தது மட்டுமன்றி பல்வேறு தருணங்களிலும் கட்சியோடு கட்டுக்கோப்புடன் பயணித்துவந்துள்ள சிரேஸட உறுப்பினர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும் என்பதால் இவ்வாறு அவரை ஓரங்கட்டியிருக்த்தேவையில்லை என்பது போராளிகளின் கருத்தாக இருக்கிறது
இந்தப் பத்தியினை எழுதும் போது
அண்மையில் முகநூல் நண்பரொருவர் என்னிடம் ஹாபிசுக்குதான் முதலமைச்சரபதவி கிடைக்கும் என்றும் அதற்குரிய டீல் எல்லாம் பேசிமுடிந்துவிட்டதாகவும் சபதமிட்டிருந்தமை நினைவுக்கு வருகிறது

எது எப்படியோ அம்பாறைப் போராளிகளின் அபிலாசைக்கு சங்கூதியிருப்பது எதிர்வரும் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற தலைவரின் கணிப்பு தோற்றுப்போகாமல் இருப்பதற்கு உரிய திட்டங்களிலும் தலைவர் கவனம் செலுத்தியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top