இரண்டு மாதகால
இழுபறிக்குப் பின்னர்
கிழக்கு
மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம்
ஏகமனதாக நிறைவேற்றம்!
இழுபறியில்
இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று 10ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் சபை நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டது.
இந்த
சபை அமர்வில் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் மற்றும் புதிய உறுப்பினர் அலிசாஹிர்
மௌலானா ஆகியோரை வரவேற்று 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் 37 உறுப்பினர்களில் வரவு-செலவுத்திட்டத்துக்கு 34 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன்
ஏனைய இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை
0 comments:
Post a Comment