கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் பதவியேற்பு
கிழக்கு
மாகாண புதிய
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று
10 ஆம் திகதி காலை தனது கடமைகளை
உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்வைபவத்தில்
போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள்
முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், முன்னாள்
சுகாதார அமைச்சர்
எம்.ஐ.எம்.மன்சூர்,
மாகான சபை
அமைச்சர்கள், சபை தவிசாளர், மாகாண சபை
உறுப்பினர்கள் நசீர், ஜெமீல், தவம், அன்வர்,
லாகிர், மற்றும்
பிரதேச சபை
தவிசாளர்கள்,உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
முக்கியஸ்தர்கள், கட்சிப்போராளிகள், ஆதரவாளர்கள்
கலந்து கொண்டனர்.
அத்துடன் அமைச்சின்
செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில்
கலந்து கொண்ட
அனைவரும் புதிய
முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து
உரையாற்றிய புதிய முதலமைச்சர் முதலில் தனக்கு
வாக்களித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவித்துகொண்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தேசிய
தலைவர் ரவுப்
ஹக்கீம் தனது
நன்றிகளை தெரிவித்துகொண்டார்.
அத்துடன் இன
மத மொழி
வேறுபாடுகள் இன்றி தனது கடமைகளை மேற்கொள்வேன்
என உறுதிபட
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment