ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன இன்று இந்தியா செல்கிறார்
மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டு
பயணமாக இன்று
இந்தியா செல்கிறார். மஹிந்த ராஜபக்ஸவின் 10 ஆண்டு கால ஆட்சியை
முடிவுக்கு கொண்டு வந்த மைத்ரிபால சிறிசேன
4 நாள் உத்தியோகபூர்வப்
பயணமாக இன்று இந்தியாசெல்கின்றார்.
டில்லி
ராஜ்பவனில் அவருக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
விருந்தளித்து கெளரவிக்க உள்ளார். நாளை இலங்கை ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்களை
சந்தித்து பேசுகிறார்.
பிரதமர் மோடியுடன்
இரு தரப்பு
உறவுகள் குறித்து
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இலங்கையில்
தமிழர்களுடனான அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள்,
பொருளாதாரம், மறுகுடியேற்ற விவகாரங்கள், தமிழர் பகுதியில் இராணுவத்தை
திரும்ப பெறுதல்,
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவது,
தமிழக மீனவர்
பிரச்னை உள்ளிட்ட
பல்வேறு முக்கிய அம்சங்களும்
பேச்சுவார்த்தையில் இடம் பெறும்
என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம்,
விவசாயம் உள்ளிட்ட
பல்வேறு ஒப்பந்தங்களும்
கையெழுத்தாக உள்ளன.
இதனைத்தொடர்ந்து,
17 ஆம் திகதி பீகாரில்
உள்ள புகழ்பெற்ற
புத்த மத கோயிலில்
புத்தகயாவுக்கும், திருப்பதி ஏழுமலையான்
கோயிலுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செல்ல
உள்ளார். 18 ஆம் திகதி அவர் நாடு
திரும்புகிறார்.
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவுடன் டி.எஸ்.சுவாமி நாதன்
உள்ளிட்ட அமைச்சர்கள்
பலரும் இந்தியா செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment