இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து
சில சுவாரஸ்ய தகவல்கள்
* இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான
போட்டியில் 2003 ஆம் வருடம் நடந்த போட்டியில்
பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 101 ஓட்டங்களை
எடுத்துள்ளார்.
* இந்திய
அணி முதல்
முறையாக சச்சின்
டெண்டுல்கர் இல்லாமல் உலகக் கிண்ணப்போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.
* உலகக்
கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானை எதிர்த்து
விளையாடிய அனுபவம்
உள்ள இந்திய
அணி வீரர்கள்
தோனி, கோலி
மற்றும் சுரேஷ்
ரெய்னா தான்.
அந்த 3 பேரை
தவிர மற்றவர்கள்
முதல்முறையாக உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக
விளையாட உள்ளனர்.
* இந்தியாக
எதிராக உலகக்
கிண்ணப்போட்டிகளில் பாகிஸ்தான் அணியில்
மிஸ்பா உல்
ஹக், முன்னாள்
கேப்டன் ஷாஹித்
அப்ரிதி, யூனுஸ்
கான், உமர்
அக்மல், வஹாப்
ரியாஸ் ஆகியோர்
உலகக் கிண்ணப்
போட்டிகளில் ஏற்கனவே விளையாடியுள்ளனர்.
* உலகக்
கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் ஒரு
முறை கூட
இந்தியாவை ஆல்
அவுட் ஆக்கியது
இல்லை. ஆனால்
இந்திய அணி
பாகிஸ்தான் அணியை 1992, 1999 மற்றும்
2011 ஆகிய வருடங்களில்
ஆல் அவுட்
ஆக்கியுள்ளது.
* உலகக்
கிண்ணப் போட்டியில் ஒரு இந்திய
வீரர் கூட
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தது
இல்லை. ஆனைல்
அதிகபட்சமாக 2003 ஆம் வருடம் சச்சின் 98 ஓட்டங்கள்
எடுத்தார்.
* 1992 ஆம் வருடம் மார்ச் 4 ஆம்
திகதி சிட்னி
மைதானத்தில் தான் முதல்முறையாக இந்தியா-பாகிஸ்தானுக்கு
இடையேயான உலகக்
கிண்ணப் போட்டி நடைபெற்றது. அதன் பிறகு பெங்களூர்(96),
மான்செஸ்டர்(99), சென்ச்சுரியன்(03), மொஹாலியில்(11)
நடைபெற்றது.
* இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான
உலகக் கிண்ணப்
போட்டிகளில் 5 இன்னிங்ஸில் 313 ஓட்டங்கள் எடுத்து
உலகக் கிண்ண
வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக
ஓட்டங்கள் எடுத்தவர் என்ற பெயரை
பெற்றுள்ளார் சச்சின்.
* வெங்கடேஷ்
பிரசாத் தான்
இந்தியா-பாகிஸ்தானுக்கு
இடையேயான உலகக்
கிண்ணப் போட்டிகளில் அதிகபட்சமாக 2 இன்னிங்ஸில்
8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
* இன்று
நடைபெறுகின்ற போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்து 20 நிமிடங்களில்
விற்றுத் தீர்ந்தது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment