எனது முதல் இந்திய பயணம்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
இந்தியாவில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவிப்பு
எனது முதல் இந்திய பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன இந்தியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு
மார்ச்சில் வருகை தர உள்ள இந்திய பிரதமர் மோடியை வரவேற்க நாங்கள் மிக ஆவலாக உள்ளோம்.
மோடியின் இலங்கை வருகை இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும், இந்தியாவுக்கும் - இலங்கைக்குகும் இடையே வலுவான பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகவே அதிபராக பதவியேற்ற பின்னே எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது.
இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர், எங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும்" என்றும் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன செய்தியாளர்களிடம்தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின்மூலம் இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். பல்வேறு ஒப்பந்தங்களில் இன்று
இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
0 comments:
Post a Comment