இலங்கையில் இந்தியாவின்
அந்நிய முதலீடு அதிகரிக்கப்படும்
-
இந்தியப் பிரதமர் மோடி
இந்தியா
இலங்கை இடையே 4 முக்கிய ஒப்பந்தங்களும்
கையெழுத்தானது.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் மோடி செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி,இந்தியா - இலங்கை நட்புறவு புதிய பரிமாணங்களை எட்டும் தருணம் வந்துவிட்டது.
இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்னை
அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக வரும் மார்ச் மாதம்
அவர்கள் நாட்டுக்குச் செல்வேன்.
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நானும், சிறிசேனவும் முனைப்புடன் இருக்கிறோம். இந்தியா - இலங்கை பரஸ்பரம் நம்பிக்கைக்கு, இப்போது கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு
சான்றாகும்.
விரைவில், இந்தியா - இலங்கை வர்த்தக செயலாளர்கள் அளவிளான சந்திப்பு நடைபெறும். மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசித்தோம் வரலாற்றுக்கு
முற்பட்ட காலம் முதலே இந்தியா - இலங்கை இடையே தொடர்பபு உள்ளது. இரு
நாட்டினுடைய இலட்சியங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை. இருநாட்டு
பொருளாதார வளர்ச்சிக்கு உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
இருநாட்டிற்கிடையே அணுசக்தி துறையில் ஒப்பந்தம்
ஏற்படுத்தப்படும் மற்றும் இலங்கையில் இந்தியாவின் அந்நிய முதலீடு அதிகரிக்கப்படும் இலங்கையுடன் விமானம் மற்றும் கடல் வழி தொடர்புகளை மேம்படுத்த
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்தியா இலங்கை இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தானது.
இலங்கையில் கல்வி நிலையம் தொடங்குவதற்கு நாளந்தா பல்கலைகழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கல்வி நிலையம் தொடங்குவதற்கு நாளந்தா பல்கலைகழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment