சம்மாந்துறை
வலயக் கல்விப் பணிப்பாளராக
அனுவமும் திறமையுமிக்க முக்தாரை நியமிக்குமாறு
சம்மாந்துறை
கல்விச்சமுகம் ஆளுநரிடம் கோரிக்கை
சம்மாந்துறை
வலயக் கல்விப்
பணிப்பாளராக அனுவமும் திறமையுமிக்க ஏ.எல்.எம். முக்தாரை நியமிக்குமாறு வலய ஆசிரியர் சங்கம் மற்றும் தரம் பெற்ற அதிபர் சங்கம் என்பன
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சம்மாந்துறை
வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த காலங்களில் இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு – 1
ஐச் சேர்ந்த எம்.ஏ.எம். சாபிதீன், ஐ.எம். இஸ்ஸதீன், எம்.ரி.ஏ.தெளபீக், யூ.எல்.எம்.
ஹாஷீம், எம்.கே. மன்சூர் ஆகியோரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு –2 ஐச் சேர்ந்த
எம்.எஸ். ஜலீல் என்பவரும் வலயக் கல்விப் பணிப்பாளராக பதவி வகித்து கடமைகளைச் செய்து
வந்தார்கள்.
ஆனால்,
இன்று இக்கல்வி வலயப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு – 3 ஐச் சேர்ந்த
அனுபவம் குறைந்த ஒருவர் கடமை செய்துவருவதால் சம்மாந்துறை வலயத்திலுள்ள பாடசாலைகள்,
ஆசிரியர்கள் மற்றும் பிரதேச ரீதியாக எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளைக்
காணமுடியாமல் உள்ளது. இது தவிர நிர்வாக ரீதியாகவும் இக்கல்வி வலயத்தில் பல பிரச்சினைகளை
எதிர்நோக்கவும் வேண்டியிருக்கிறது.
சுமார்
10 வருட காலமாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் பகுதியில் பிரதிக்
கல்விப்பணிப்பாளராக திறமையுடன் கடமையாற்றி ஆசிரியர்களின் பிரச்சினைகள், பாடசாலைகளின்
பிரச்சினைகள், பிரதேச ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்பவத்திற்கு சரியான முறையில்
தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து அணுபவங்களைப் பெற்றுள்ள பிரதிக் கல்விப் பணிப்பளர் ஏ.எல்.
எம். முக்தார் அவர்களை சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளராக நியமிக்குமாறு வேண்டுகின்றோம்.
இலங்கை
கல்வி நிர்வாக சேவை வகுப்பு – 2 ஐச் சேர்ந்த பிரதிக் கல்விப்பணிப்பளர் முக்தார்
2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் பதவிக்கான
நேர்முகப் பரீட்சையில் 38 புள்ளிகளைப் பெற்று முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
(ஏ.சி.எம். சுபைர் 32 புள்ளிகள், பி.மயில்வாகணம் 29 புள்ளிகள்)
இவ்வாறு
அதிக புள்ளிகளை இவர் பெற்றிருந்தும் இப்பதவிக்கு நியமிக்கப்படாமல் அரசியல் பழிவாங்கல்
காரணமாக முன்னாள் ஆளுநரினால் இவர் பின் தள்ளப்பட்டார்.
இது சம்மந்தமாக பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிடமும் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
பிரதிக்
கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் தற்போது கல்முனை வலயக் கல்வி அலுவகத்தில் திட்டமிடல்
பகுதியில் பொறுப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.
இத்தகவல்களை
எடுத்துக்கூறி சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக அனுவமும் திறமையுமிக்க ஏ.எல்.எம்.
முக்தாரை நியமிக்குமாறு வலய ஆசிரியர் சங்கம் மற்றும் தரம் பெற்ற அதிபர் சங்கம் ஆகிய
அமைப்புக்கள் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment