உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
நியூசிலாந்து
அணி வெற்றி பெற்றது
இலங்கை-
நியூசிலாந்து அணிகள் இடையிலேயான 2015-ம் ஆண்டு
உலக கிண்ண
கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து
அணி அபார
வெற்றி பெற்றது. க்ரைஸ்ட்சர்ச்
நகரில் நடக்கும்
போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை
அணி பீல்டிங்கை
தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து
களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில்
6 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன்
பிரண்டன் மெக்குலம்
65 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 57 ஓட்டங்களும் கோரி
ஆண்டர்சன் 75 ஓட்டங்களும் எடுத்தனர். 332
ஓட்டங்கள் என்ற
வெற்றி இலக்குடன்
களமிறங்கிய இலங்கை அணி, 46.1 ஓவர் முடிவில்
அனைத்து விக்கெட்டையும்
இழந்து 233 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி
அடைந்தது.
இதேவேளை இலங்கை
அணி சார்பாக
அதிகபட்ச ஓட்டமாக
திரிமன்ன
65 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மேலும்
இலங்கை சிங்கங்களின்
கர்வத்தை முதல்
போட்டியில் அடக்கி நியூசிலாந்து 98 ஓட்டங்களால்
வெற்றி பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது. இன்றைய
போட்டியில் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் பந்தை
துவம்சம் செய்த
கொறி அன்டசன்
தெரிவானார்.
0 comments:
Post a Comment